அண்ணாமலையின் வலது கைக்கு நவ.10 வரை நீதிமன்ற காவல்!! - Seithipunal
Seithipunal


சென்னை பனையூரில் அமைந்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாடகை வீட்டின் வெளியே நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டு இருந்த பாஜக கொடி கம்பத்தை காவல்துறையினர் அகற்றிய போது வன்முறையில் ஈடுபட்டதாக தமிழக பாஜக விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு பிரிவு தலைவரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வலது கரமாக செயல்பட்டு வந்த அமர் பிரசாத் ரெட்டியை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமர் பிரசாத் ரெட்டியை காவல்துறையினர் மேலும் இரண்டு வழக்குகளில் கைது செய்துள்ளனர். அதில் ஒன்று சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது அரசு விளம்பரத்தில் பிரதமர் மோடியின் படம் ஒட்டியதாக பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார்.

மற்றொன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற பாஜக போராட்டத்தின் போது போக்குவரத்து காவலரிடம் தகராறு ஈடுபட்டதாக காவலர் அளித்த புகாரின் பேரில் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அமர் பிரசாத் ரெட்டி இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் நீதிமன்றம் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நவம்பர் 10ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Court remand for Amar Prasad Reddy till Nov10


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->