செல்லூர் ராஜூ மீதான வழக்கு விசாரணைக்கு தடை.!! நீதிமன்றம் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு மே மாதம் 29ஆம் தேதி தமிழகத்தில் போதைபொருள் புழக்கம்,சட்டம் ஒழுங்கு சீர்குலைவை கண்டித்து அதிமுக சார்பில் மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தமிழ்நாடு அரசு குறித்தும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறித்தும் அவதூறான கருத்துக்கள் பேசியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகார் மீது காவல்துறையினர் விசாரணை நடத்த தடை விதிக்க கோரியும் காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய கோரியும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Court stay on case against AIADMK sellur Raju


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->