மெட்டு சரியில்லையா.. இது "வித்தியாசமான விளக்கம்"... கே.பாலகிருஷ்ணன் ட்விட்..!! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொது நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் இன்று தனியார் செய்தி ஊடத்திற்கு பேட்டி அளித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்த்தாய் வாழ்த்தின் மெட்டு சரியில்லாததால் பாதியில் நிறுத்தப்பட்டதாக விசித்திரமான விளக்கத்தை அளித்திருந்தார். 

அதற்கு தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எந்த மெட்டு பாடினாலும் பாடுவது தமிழ்த்தாய் வாழ்த்து என அண்ணாமலைக்கு தெரியாதா? என் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "கர்நாடகத்தில் பாஜக நிகழ்ச்சியில்  தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் அவமதிக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியதாகும். தமிழ் தாய் வாழ்த்தினை இசைக்கவிட்டு பாதியில் நிறுத்தி அவமதித்துள்ளனர். அப்போது மேடையிலேயே நின்றுகொண்டிருந்த பாஜக  தலைவர் அண்ணாமலை, எந்த எதிர்வினையும் செய்யவில்லை. சமூக ஊடகங்களில் இந்த காட்சியை பார்த்த பலரும் கண்டித்து வருகின்றனர்.

இப்போது அண்ணாமலை பாடலின் மெட்டு சரியில்லை என்று வித்தியாச விளக்கத்தை கொடுத்துள்ளார். எந்த மெட்டில் பாடினாலும் பாடப்படுவது தமிழ் தாய் வாழ்த்து‌ என அண்ணாமலைக்கு தெரியாதா? தமிழ் தாய் வாழ்த்தை அவமதித்த பாஜக, தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்." என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CPI Balakrishnan criticized annamalai explanation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->