தேர்தல் விதி மீறியதாக மோடி மீது CPI பரபரப்பு புகார்.!!
CPI complaint against Narendra Modi in ECI
பிரதமர் நரேந்திர மோடி கோவையில் நேற்று பாஜக சார்பில் நடைபெற்ற வாகன பேரணியில் கலந்து கொண்டார்.
இந்த வாகன பேரணியல் எதிர்பார்த்த கூட்டம் கூடவில்லை கூடவில்லை என தெரிய வருகிறது.
இதன் காரணமாக பாஜகவினர் பள்ளி மாணவர்களை பேரணியில் நிற்க வைத்ததாக புகார் எழுந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர் தேர்தல் நடத்தும் அதிகாரி என்ற முறையில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதேபோன்று சம்பந்தப்பட்ட பள்ளிக்கும் இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி கலந்து கொண்ட கோவை வாகன பேரணியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி மாணவர்கள் பள்ளி சீருடை உடன் பங்கேற்று உள்ளனர்.
எனவே பிரதமர் நரேந்திர மோடி மீது தேர்தல் நடத்தை விதிகளை படி பரப்புரையில் சிலர்களை பயன்படுத்தியுள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
English Summary
CPI complaint against Narendra Modi in ECI