பாமக கூறுவதை ஏற்க முடியாது; என்எல்சி பாதுகாக்கப்பட வேண்டும்.!! - பாலகிருஷ்ணன், சிபிஎம்.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி நிறுவனம் வளையமாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாம் கட்ட நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக சுமார் 25,000 டாக்டர் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தொடங்கியது. இதற்காக விவசாய நிலங்கள் நடுவே கால்வாய் அமைக்கும் பணியின் போது அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை ராட்சத இயந்திரங்கள் மூலம் அழித்தனர்.

இதற்கு பல்வேறு தரப்பட்ட மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணியும் தனது வேதனையை வெளிப்படுத்தி இருந்தார்.

மேலும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நேற்று நடைபெற்ற முற்றுகை போராட்டத்தின் போது காவல்துறையினர் தடியடி நடித்ததால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மேலும் விவசாயத்தை அழிக்க துடிக்கும் என்எல்சி நிறுவனத்தை இழுத்து மூடும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இந்த நிலையில் என்எல்சி நிறுவனத்தை இழுத்து மூட வேண்டும் என பாமக கூறுவதை ஏற்க முடியாது எனவும், என்எல்சி நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன்சாவடி பகுதியில் உள்ள அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக பாமக நடத்திய முற்றுகை போராட்டம் வன்முறையாக மாறியது வருத்தத்திற்குரியது.

என்எல்சி நிர்வாகம் விவசாயிகளுடன் முறையாக பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கையை ஏற்று, அதனை நிறைவேற்றிய பிறகு நிலத்தை கையகப்படுத்திக்கொள்ள வேண்டும். அனைத்து கட்சிகளும் விவசாயிகளுக்காக போராடக்கூடியவர்கள் தான். என்எல்சி நிறுவனத்தை இழுத்து மூடப்பட வேண்டும் என்றும், அப்புறப்படுத்த வேண்டும் என்றும் பாமக கூறுவதை ஏற்க முடியாது. என்எல்சி நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டும்" என பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CPM Balakrishnan opined NLC should be protected


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->