சி.பி.எம் மீது பாய்ந்த திமுகவின் முரசொலி.. பம்பிய டி.கே ரங்கராஜன்... வேற வழி இல்லையே..!!
CPM TKRangarajan response to DMK Murasoli criticism
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலையில் என்ற வெளியான தலையங்கத்தில் கூட்டணி கட்சியான சிபிஎம் மூத்த தலைவர் டி.கே ரங்கராஜனை கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. அந்த தலையங்கத்தில் குறிப்பாக "சிபிஎம் மூத்த தலைவர்களில் ஒருவரான டி.கே ரங்கராஜன் கோயம்பேட்டில் நடந்த மே தினம் விழாவில் பேசும்பொழுது தமிழக அரசு குறித்து தவறான கற்பித்தலை உருவாக்கியுள்ளார்.
தமிழகத்தை திமுக அரசு ஆட்சி செய்கிறதா.? அல்லது அதிகாரிகளும் முதலாளிகளும் சேர்ந்து ஆட்சி செய்கிறார்களா.? அதிகாரிகள் அரசை வழி நடத்துகிறார்கள். பொத்தம் பொதுவாக நாளாந்தர பேச்சாளர் போல் கூட்டணியில் இருந்து கொண்டே பொதுவெளியில் கூக்குரலிடுவது தான் கூட்டணி தர்மமா..? தமிழ்நாடு சிபிஎம் கட்சியை தவறாக யாரோ வழிநடத்தி வருகிறார்கள் என்பது நம்முடைய சந்தேகம்.
திமுக அரசு தொடந்து இருக்க வேண்டுமானால்... என்று சொல்லும் தகுதியோ யோகிதையோ டி.கே ரங்கராஜன் போன்றவருக்கு இல்லை என முரசொலி தலையங்கத்தில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டி.கே ரங்கராஜன் "திமுக அரசை விமர்சிக்க எனக்கு தகுதியோ யோக்கியதையோ இல்லை என்று சொல்ல முரசொலிக்கு உரிமை இருக்கிறது என நினைக்கிறேன். என்னை பற்றிய விமர்சனத்திற்கு உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை" என பம்பிய எவ்வாறு மழுப்பலான பதிலை அளித்துள்ளார்.
நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களில் உள்ள நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் திமுக அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தேர்தல் கூட்டணியில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏனெனில் அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு முன்பு கூட்டணியை முடித்துக் கொண்டு வெளியேற வாய்ப்பில்லை என்றே தெரிய வருகிறது. இதனால் வேற வழியின்றி திமுகவுடன் கூட்டணி தொடர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
English Summary
CPM TKRangarajan response to DMK Murasoli criticism