கடலூர் : கிராம சபைக் கூட்டத்தில் உண்டான பரபரப்பு.! பதற்றத்தில் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


காந்தி பிறந்த நாள் காந்தி ஜெயந்தி விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் இறைச்சி கடைகள் மற்றும் டாஸ்மாக் கடைகள் உள்ளிட்டவை மூடப்படுகின்றன. 

அத்துடன் ஒவ்வொரு கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும். இந்த கிராம சபை கூட்டத்தில் மக்களின் குறைகள் குறித்து ஆட்சியாளர்கள் கேட்டறிவார்கள். இந்த கிராம சபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். 

அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணகிராம ஒன்றியம் பகுதியில் இருக்கும் கோட்லாம்பாக்கம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா தலைமை தாங்கினார்.

ஊராட்சி ஒன்றிய அலுவலரான முருகன் முன்னிலை வகுத்த நிலையில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஊர் தலைவரின் ஆதரவாளரான இரண்டாவது வார்டு உறுப்பினர் ஜெய்சங்கர் என்ற நபரும், துணைத் தலைவர் வசந்தி என்பவரின் கணவர் வீரமணியும் வரவு செலவு கணக்கு பற்றி கேட்டபோது விவாதம் ஏற்பட்டது. அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் அப்பகுதியில் பரபரப்பு உண்டானது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Village council meet make Controversy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->