பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுகவுக்கு தான் இழப்பு.. அதிமுக எம்.பி சி.வி சண்முகம் ஆவேசம்..!! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தல் மற்றும் தேர்தல் கூட்டணி தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி சண்முகம் பாஜகவுடன் கூட்டணி அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் பேசிய அவர் "பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் சிறுபான்மையினர் ஓட்டு நமக்கு கிடைக்காது. அதனால் அதிமுகவிற்கு பேரிழப்பு. இதனால் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டாம்" என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்தின் இத்தகைய கருத்திற்கு பெரும்பாலான அதிமுக மாவட்டச் செயலாளர்கள் உடன்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் ஒரு சில தலைமைக் கழக நிர்வாகிகள் இந்த கருத்தால் முணுமுணுத்துள்ளனர். இதற்கு இ.பி.எஸ் பாஜக குறித்து தற்பொழுது எதுவும் பேச வேண்டாம் என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் பொழுது அதை பார்த்துக் கொள்ளலாம் என இபிஎஸ் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CV Shanmugam opposes AIADMK alliance with BJP


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->