பொன்முடி ஒரு டம்மி பீசு... என்னைப் பற்றி பேசவில்லைனா பதவி இருக்காது.. சி.வி சண்முகம் பதிலடி..!!
CV Shanmugam response to Minister Ponmudi comment
விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் தற்போதைய அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி சண்முகம் திமுகவின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். குறிப்பாக திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை தன்னாட்சி அமைப்பாக செயல்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அமைச்சர் பொன்முடி விமர்சனம் செய்தது குறித்து பேசிய அவர் ''பொன்முடி ஒரு டம்மி பீஸ் ஆகிப்போச்சு.. என்ன பத்தி பேசினால் தான் அவரைப் பொறுப்பில் வச்சிருப்பாங்க... இல்லையெனில் இருக்கும் பதவியை பிடுங்கிக்கிட்டு விட்டுவிடுவார்கள்.. அவரைப் பற்றி நிறைய பேசலாம். என்னைப் பற்றி அவர் பேசினா.. பேசிட்டு போகட்டும். ஒழிஞ்சி போறாரு விடுங்க.
திமுகவைப் போன்று அதிமுகவில் யாருக்கும் ராஜ பரம்பரை மாதிரி பட்டம் கட்டவில்லை. கருணாநிதி இருக்கும் போது ஸ்டாலினுக்கும், ஸ்டாலின் இருக்கும் போது உதயநிதிக்கும் இளவரசர் பட்டம் கட்டியது போல அதிமுகவில் யாருக்கும் கட்டவில்லை. என் அப்பா இறக்கும் பொழுது நான் கிளையில் சாதாரண உறுப்பினர்.
பின்னர் படிப்படியாக அதிமுகவில் வளர்ந்து வந்துள்ளேன். நடிகைகளோடு சுற்றிக் கொண்டிருந்து; பின்னர் கூட்டி வந்து எங்களை கோட்டையில் அமர வைக்க வில்லை. இதனால் என்னை பற்றி பேசுவதற்கு பொன்முடிக்கு அருகதையும் தகுதியும் அறவே கிடையாது" என ஆவேசமாக பேசினார்.
English Summary
CV Shanmugam response to Minister Ponmudi comment