மேல்பாதியில் கலவரத்தை தூண்டும் அமைச்சர் பொன்முடி.. சி.வி சண்முகம் பகிரங்க குற்றச்சாட்டு..!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 22 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக அப்பகுதி மக்கள் கடந்த 10 நாட்களாக மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. இதனை கருத்தில் கொண்டு திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுன் அப்பகுதியில் வாழும் 60 குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்களை வழங்க ஏற்பாடு செய்திருந்தார். அதனை அதிமுக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவி சண்முகம் எக்கியார் குப்பம் மக்களுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சிவி சண்முகம் "விழுப்புரம் எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்தது அடுத்து அதனை மூடி மறைப்பதற்காக மேல்பாதி கிராமத்தில் இரு சமூகங்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையை இரண்டு மாத காலமாக அதைப் பற்றி பேசாத, சிந்திக்காத அமைச்சரின் நிலம் அந்த கிராமத்தின் தான் உள்ளது.

தினந்தோறும் அந்த நிலத்திற்கு போகிறார்கள், பார்க்கிறார்கள். மேல்பாதி கிராமத்தின் திரௌபதி அம்மன் கோவில் பிரச்சனை ஏற்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் விழுப்புரம் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் பொன்முடி எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இந்த கள்ளச்சாராயம் பிரச்சனை வந்து 22 பேர் மரணம் அடைந்த பிறகு நிர்வாக திறமையற்ற முதலமைச்சர் மீது விமர்சனங்களும், கண்டனங்களும், அமைச்சர் பொன்முடி மீது எழுந்த விமர்சனங்களையும் மூடி மறைப்பதற்காக, திசை திருப்புவதற்காக திட்டமிட்டு கலவரத்தை உருவாக்க பார்க்கிறார்.

திட்டமிட்டு இரு சமூகங்களுக்கு இடையே கலவரத்தை உண்டாக்கி அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் அமைச்சர் பொன்முடி மீது திமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என செய்தியாளர்கள் சந்திப்பில் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CVe Shanmugam accused Minister Ponmudi of trying to create riots


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->