மக்களை ஏமாற்றும் பித்தலாட்ட அரசு தான் திமுக ஆட்சி! ரவுண்டு கட்டிய சி.வி சண்முகம்!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் பிடாகம் பகுதியில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி கூட்டம் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய சிவி சண்முகம், ”அதிமுக இரண்டு கோடி தொண்டர்களை வைத்துள்ள மிகப்பெரிய கட்சி. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போன்று எத்தனை பேர் வந்தாலும் அதிமுகவை எதுவும் செய்ய முடியாது. குண்டர்கள் உள்ள கட்சி தான் திமுக. அந்தக் கட்சியில் உள்ளவர்கள் வசூல் செய்து கொடுக்கும் பணியில்  ஈடுபட்டுள்ளனர்.

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இருந்து எது எது சிதறபோகும் என தெரியவில்லை. பொங்கல் பண்டிகைக்கு பிறகு நாடாளுமன்ற தேர்தல் வரப்போவாதால் அதிமுகவினர் தயாராக இருக்க வேண்டும். அதிமுகவிற்கு எந்த பாரமும் இல்லை. 

இனி எவருடைய பாவத்தையும் சுமக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதில் அதிமுக தெளிவாக உள்ளது. இந்த கட்சியில் எந்த பதவி வேண்டுமானாலும் தொண்டர்கள் கேட்கலாம். சீட்டும் கிடைக்கும் வெற்றியும் கிடைக்கும். இது திமுக போன்ற எந்த கட்சியிலும் நடைபெறாது. திமுகவில் ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என அடுத்தடுத்து குடும்ப அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் பெயரிலையே நிதி என்று வைத்து அவர்களுக்கு பணம் மட்டும் தான் முக்கியம் என்பதை காட்டுகின்றனர். 

அதிமுகவில் இருந்து தொண்டர்கள் விலகுவதில்லை. அமைச்சராக, முதலமைச்சராக , எம்எல்ஏவாக இருந்தவர்கள் தான் கட்சியில் இருந்து விலகி சென்றுள்ளனர். திமுக தேர்தல் வரக்கூடிய சூழலில் தான் மகளிருக்கான இடஒதுக்கீடு அறிவித்தது. மகளிர், இளைஞர் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த அரசியல் கட்சியினரும் அரசியல் செய்ய முடியாது.  

திமுக ஆட்சியின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த ஆட்சியில் தான் அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளது. மக்களை பற்றி சிந்திக்காத ஒரு பித்தலாட்ட அரசாக தான் திமுக ஆட்சி உள்ளது" என்று ஆவேசமாக பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cve shanmugam criticized dmkgovt mkstalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->