உலகிலேயே அதிசய மனிதர் செந்தில் பாலாஜி தான்.. போட்டுத் தாக்கிய சி.வி சண்முகம்..!! - Seithipunal
Seithipunal


திமுக அரசை கண்டித்தும், அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் இன்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி சண்முகம் பேசியதாவது "அமலாக்கத்துறை விசாரணை நடத்தும் வரை அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்த செந்தில் பாலாஜி, கைது என்று சொன்னவுடன் திடீரென்று தனக்கு நெஞ்சுவலி வந்துவிட்டது என உருண்டு புரண்டு நடித்த காட்சிகள் எல்லாவற்றையும் பார்த்தோம்.

பொதுவாக 40 முதல் 45 வயதுக்கு மேல் போனாலே அனைவருக்கும் இதயத்தில் அடைப்புகள் ஏற்படுவது இயல்பு. அது எத்தனை சதவிகிதம் என்பதை பொறுத்துதான் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்படும். 10% முதல் 20% என்றால் சிகிச்சை தேவையில்லை. 60% முதல் 70% அடைப்பு இருந்தால் தான் சிகிச்சை தேவை. ஆனால் செந்தில் பாலாஜிக்கு 90% அடைப்பு இருக்கிறது. அதுவும் 3 அடைப்புகள் என மருத்துவர்கள் கூறுகின்றனர்

நம்ம வீட்டில் யாருக்காவது மாரடைப்பு வந்துவிட்டால் அய்யய்யோ உடனே ஆபரேஷன் செய்யணும் காசு இல்லை என்றால் கூட பரவாயில்லை அப்புறம் கொடு என உடனே அறுத்து ஆபரேஷன் பண்ணுகிறார்களா இல்லையா? ஆனால் செந்தில் பாலாஜிக்கு மாரடைப்பு வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. இன்றோடு 8வது நாள். 8 நாளாக மூன்று இடத்தில் 90% அடைப்பு வந்தும் உலகத்தில் உயிரோடு இருக்கிற ஒரு அதிசய மனிதர் யார் என்றால் செந்தில் பாலாஜி மட்டும் தான். அவரை காப்பாற்றுகின்ற மருத்துவர்கள் நம்ம தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள்'' என கடுமையாக விமர்சனம் செய்தார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CVe Shanmugam criticized minister senthil balaji


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->