மத்திய பாஜக மக்களுக்கு "செய்தது என்ன?".. கொந்தளிக்கும் சி.வி‌ சண்முகம்.!! - Seithipunal
Seithipunal


மதத்தின் பெயரால் நாட்டை துண்டாக்க பார்க்கிறது பாஜக.!! 

மரக்காணத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் மதத்தின் பெயரால் மத்திய பாஜக அரசு அரசியல் செய்கிறது என குற்றம் சாட்டியுள்ளார். அமைதியாக உள்ள தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் சமம் என கூறியுள்ள சிவி சண்முகம், யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று கூற உங்களுக்கு உரிமை இல்லை என பாஜகவை கடுமையாக சாடியுள்ளார். வழிபாட்டு உரிமை என்பது என்னுடைய உரிமை என தெரிவித்துள்ளார்.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வீட்டில் ஒருவர் அரசு வேலை தருவோம் என அண்ணாமலை கூறி வருகிறார். கடந்த 10 ஆண்டுகாலமாக நாட்டை ஆண்டது யார்? என்று அண்ணாமலைக்கு சீவி சண்முகம் கேள்வி எழுப்பி உள்ளார். 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு வேலை கொடுத்துள்ளார்கள் என கேள்வி எழுப்பியுள்ள சீ.வி சண்முகம்.

என்.எல்.சி‌ நிறுவனத்தில் ஆயிரம் பேரை வேலைக்கு எடுத்தார்கள், அதில் ஒருவர் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை. நம் நிலத்தில் கோடிக்கணக்கில் லாபம் பார்க்கும் என்எல்சி நிறுவனத்தில் ஒரு தமிழர் கூட இல்லை கூறியுள்ளார். மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டை சேர்ந்தவர்களில் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்துள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்

நாட்டில் இருந்த அரசு நிறுவனங்கள் அனைத்தையும் விற்றுவிட்ட பாஜக அரசு இரண்டு பேரை மட்டுமே வளர்கிறது. பாஜக ஆட்சியில் அம்பானி அதானி மட்டும் தான் வளர்கின்றனர் மற்றும் நிறுவனங்களை காலி செய்தது தான் பாஜகவின் சாதனை. பிரதமர் மோடி வள்ளுவர் பற்றியும் தமிழ் பற்றியும் பேசுவார் மறுபக்கம் இந்தி திணைப்பு செய்வார் என குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cveshanmugam alleged on BJP govt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->