வெட்க கேடு.. இது தான் உங்க லட்சணம்.. திமுக, பாஜகவை போட்டு தாக்கிய சி.வி சண்முகம்.!
Cveshanmugam criticized DMK BJP in drugs issue
தமிழகத்தில் அதிகரித்துள்ள போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து போதைப் பொருட்களின் கிடங்காக தமிழகம் மாறி உள்ளது கண்டித்தும் அதற்கு காரணமான திமுக அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
![](https://img.seithipunal.com/media/eps admk mass.jpg)
அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம் நகராட்சி திடலில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் அதிமுக மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
![](https://img.seithipunal.com/media/20240304_120657-f4bhf.jpg)
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் "3 வருஷமா போதை பொருளை கடத்திட்டு இருக்கான். டெல்லியில் ஆண்டு கொண்டிருக்கும் அரசு என்ன செய்தது. அவர் என்னப்பா பண்ணாரு? இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் நவீன இந்தியா டிஜிட்டல் இந்தியா என என்று சொல்லிக் கொள்ளும் பாஜக அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லியில் இருந்து மூன்று ஆண்டுகளாக போதைப் பொருளை திமுகவைச் சேர்ந்த நிர்வாகி கடத்தி இருக்கிறார்.
![](https://img.seithipunal.com/media/20240304_120659-y97hs.jpg)
இவங்கதான் கண்டுபிடிச்சாங்களா? தமிழக அரசு கண்டுபிடித்ததா? டெல்லியில் இருக்கும் அரசு கண்டுபிடித்ததா? அது அதைவிட வெட்கக்கேடு. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அரசாங்கங்கள் இந்தியாவுக்கு டெல்லியில் இருந்து எங்கள் நாட்டிற்கு போதைப் பொருள் கடத்தப்படுகிறது என தகவல் கொடுக்கிறது.
![](https://img.seithipunal.com/media/stalin modi02012024-n2r3w.png)
அதன் பிறகு அமெரிக்க உளவு நிறுவனம் மத்திய அரசுக்கு தகவல் கொடுக்கிறது. அமெரிக்கா தகவல் கொடுத்த பிறகுதான் அந்த தகவலின் அடிப்படையில் தான் இவர்கள் கண்காணிக்கப்பட்டு ஜாபர் சாதிக்கின் கூட்டாளிகள் கைது செய்யப்படுகிறார்கள். இந்த மாநில அரசும் மத்திய அரசும் கண்டுபிடிக்கவில்லை எங்கே இருக்கும் அமெரிக்கா காரன் கண்டுபிடித்து சொல்கிறார்கள். இதுதான் உங்கள் லட்சணம்
English Summary
Cveshanmugam criticized DMK BJP in drugs issue