"ஆண்டான் அடிமை" மாறாதோ? சேகர்பாபுவுக்கு சேவகம் செய்த மேயர் பிரியா.?! மாஜி அமைச்சர் விமர்சனம்.!  - Seithipunal
Seithipunal


சென்னை மேயர் பிரியா எது செய்தாலும் அதுதான் அன்றைய டாப் செய்தியாக இருந்து வரும். மிகவும் இள வயது பெண்ணான பிரியா மேயர் ஆனது முதல், திமுகவின் மூத்த நிர்வாகிகளால் அவர் சரிவர நடத்தப்படவில்லை என்பது பெரும்பாலும் வைக்கப்படும் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. 

அதற்கேற்றார் போல் அடிக்கடி சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும். ஏற்கனவே, அமைச்சர் கே.என்.நேரு மேயர் பிரியாவை ஒருமையில் அழைத்தது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இது குறித்து கே என் நேரு, "தான் அவருக்கு தந்தை போன்றவர். அந்த உரிமையில் தான் அப்படி கூப்பிட்டேன்." என்று விளக்கம் அளித்தார். மேயர் பிரியாவும் அதை ஆமோதித்தார். வயது வித்தியாசம் எதுவும் இல்லை. அனைவரும் சமம் என்ற திராவிட கொள்கையை இவர்கள் மீறி நடப்பதாகவும், இதை தலைமை கண்டு கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது. 

இத்தகைய நிலையில், சமீபத்தில் மேயர் பிரியா அமைச்சர் சேகர்பாபுவுக்கு குடை பிடிப்பதை போல ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து கடும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் அந்த புகைப்படத்தை பகிர்ந்து ஒரு டுவிட் போட்டுள்ளார். அதில், "ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோ?" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

d jayakkumar about mayor priya and sekar babu viral photo


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->