அய்யோ பாவம்... சிக்கலில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள்.. வலுக்கும் எதிர்ப்பு.!!
dayanidhi maran says about reserve bank officers
சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நேற்று குடியரசு தின விழா நடைபெற்றது. அப்போது தமிழ் தாய் வாழ்த்து ஒலித்த போது ஒரு சில ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்க வில்லை. இதையடுத்து, தமிழ் தாய் வாழ்த்து பாடும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என தமிழக அரசு சமீபத்தில் சட்டம் ஏற்றி உள்ளது என ஒருவர் தெரிவித்ததையும் ,பொருட்படுத்தாமல் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சென்றனர்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் செயலுக்கு பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளது.
இதுகுறித்து மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைவராலும் போற்றப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது தமிழ்நாடே எழுந்து நின்று மரியாதை செலுத்துகிறது. ஆனால் தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சிலருக்கு என்ன நேர்ந்ததோ தெரியவில்லை. அய்யோ பாவம்!
இன்றைய குடியரசு இன விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது அவர்களில் பலரை எழுந்து நிற்க விடாமல் இறுக்கப் பிடித்து தடுத்தது எது? மாநில அரசின் அரசாணையை மதிக்க வேண்டும் என்பதுகூட புரியாதபடி தடுமாறியது ஏன்? என தெரிவித்துள்ளார்.
English Summary
dayanidhi maran says about reserve bank officers