திமுகவினரை பதறவைத்த இமெயில்! பரபரப்பில், பலத்த பாதுகாப்பில் ஏ பிளாக்! கருணாநிதி பேரனுக்கே மிரட்டலா?! - Seithipunal
Seithipunal


வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு இமெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி மகன் துரை தயாநிதி உடல்நல குறை காரணமாக, வேலூர் சிஎம்சி மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வருகிறார். 

அவருக்கு அங்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. துரை தயாநிதியின் உடல்நிலை குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அவ்வப்போது விசாரித்து வருவதாக தெரிகிறது. 

மேலும் முக அழகிரியின் குடும்பத்தினர் மருத்துவமனையிலேயே தங்கி, அவரை உடனிருந்து கவனித்து வருகின்றனர். முன்னாள் மத்திய அமைச்சரின் மகன், முதலமைச்சர் குடும்ப உறுப்பினர் என்ற அடிப்படையில் துரை தயாநிதி சிகிச்சை பெற்று வரும் அந்த தளத்திற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், வேலூர் சிஎம்சி மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேற்று மின்னஞ்சல் மூலம் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல் ஒன்று கிடைத்துள்ளது. 

இந்த கொலை மிரட்டல் குறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட, உடனடியாக மிரட்டல் விடுத்த நபர் குறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். 

மேலும், துரை தயாநிதி சிகிச்சை பெற்று வரும் சிஎம்சி மருத்துவமனையின் ஏ பிளாக் பகுதிக்கு கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சீருடை இல்லாத மூன்று போலீசார் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டுள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் மகன், மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் பேரனாகிய துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பது, திமுகவின் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

death threat DMK MK Alagiri son


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->