#BREAKING || அலங்கார ஊர்தி விவகாரம் : என்ன நடந்தது? தமிழக முதல்வருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம்.!  - Seithipunal
Seithipunal


குடியரசு தின அணிவகுப்பில், தமிழ்நாட்டிலிருந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறுவது மறுக்கப்பட்டிருப்பது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்நிலையில், சற்றுமுன் தமிழக முதல்வருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்கள் பதில் கடிதம் எழுதியுள்ளார். அவரின் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

"குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழ்நாட்டையும் சேர்த்து இருபத்தி ஒன்பது அலங்கார ஊர்திகளின் பரிந்துரைகள் கொடுக்கப்பட்டது. இதனை பல்வேறு சுற்றுகளில், பல்வேறு தகுதிகள் கருத்தில் கொள்ளப்பட்டது.

அதற்கான நிபுணத்துவம் பெற்ற குழு இருக்கிறது. அந்த குழுவினர் எடுக்கும் முடிவே இறுதி முடிவாக அமைகிறது. அந்த அடிப்படையில் தமிழ்நாட்டை சேர்ந்த அலங்கார ஊர்தி முதல் மூன்று சுற்றுகளில் தகுதி பெற்றது.

ஆனால், மூன்றாவது சுற்றில் இறுதிக்கு பிறகு அதில் தேர்வாகவில்லை. எனவே இதில் எந்தவிதமான உள்நோக்கமும் கிடையாது.

குடியரசு தினத்தை முன்னிட்டு 12 அலங்கார் அலங்கார ஊர்திகள் மட்டுமே பங்கேற்கின்றன. இதில் தமிழகத்தை சேர்ந்த அலங்கார ஊர்தி என்பது இந்த ஆண்டு இடம் பெறாது.

முன்னதாக தமிழக அலங்கார ஊர்தி கடந்த 2017, 2019, 2020, 2021 ஆகிய நான்கு ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளது" என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Defense Minister Rajnath Singh explains to Tamil Nadu Chief Minister!


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->