தேர்தல் நெருங்கும் நேரத்தில் காங்கிரசுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆம் ஆத்மி அரவிந்த் கேஜரிவால்! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த செளதரி மதீன் அஹமது, இன்று முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து உள்ளார்.

வரும் பிப்ரவரி மாதம் டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், காங்கிரஸிலிருந்து விலகி அவர் ஆம் ஆத்மியில் இணைந்துள்ளார்.

அண்மையில் தான் அவரது மகன் செளதரி சுபீர் அஹமது மற்றும் மருமகள் ஷகுஃப்தா செளதரி ஆகியோர் ஆம் ஆத்மியில் இணைந்ததைத் தொடர்ந்து, தற்போது செளதரி மதீன் அஹமதும் காங்கிரசை விட்டு ஆம் ஆத்மியில் சேர்ந்துள்ளார்.

வடகிழக்கு தில்லியின் சீலாம்பூர் தொகுதியில் 5 முறை வெற்றி பெற்றவர் செளதரி மதீன் அஹமது. அவரது மருமகள் ஷகுஃப்தா கவுன்சிலராக உள்ளார்.

சீலாம்பூர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் அப்துல் ரஹ்மானை போட்டியிட உள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், அத்தொகுதியில் 5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த செளதரி மதீன் அஹமது ஆம் ஆத்மியில் இணைவது, ஆம் ஆத்மியின் செம்மலங்களை உயர்த்தியுள்ளது.

இது குறித்து எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்த செளதரி மதீன் அஹமது, "நான் வளர்ந்துவரும் கருத்து வேறுபாட்டால் இந்த முடிவை எடுத்துள்ளேன். என்னுடைய ஆதரவாளர்கள் இந்த முடிவை புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi congress leader joint to AAP


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->