ஆட்சி போன என்ன... நீ ஆடு மாமே! ராஜினாமா செய்த டெல்லி முதல்வர் அதிஷி!  - Seithipunal
Seithipunal


டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து, டெல்லி முதல்வர் பதவியில் இருந்த அதிஷி தனது ராஜிநாமாவை அறிவித்துள்ளார்.  

டெல்லி தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றிபெற்று 27 வருடங்களுக்குப்பின் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி கடும் பின்னடைவை சந்தித்து 22 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. 

கடந்த 2015-ல் 67 இடங்களிலும், 2020-ல் 62 இடங்களிலும் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி, இம்முறை பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதே சமயத்தில் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெறாமல் ஹாட்ரிக் 0 தோல்வியை சந்தித்துள்ளது.

குறிப்பாக அரவிந்த் கேஜரிவால், மனீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின், செளரவ் பரத்வாஜ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அதிர்ச்சித் தோல்வி அடைந்தனர்.  

இதனால், முதல்வர் அதிஷி வெற்றிபெற்ற நிலையில், தனது முதலவர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார். இன்று காலை டெல்லி ராஜ் நிவாஸ் பவனில் துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவை சந்தித்து, தனது ராஜிநாமா கடிதத்தை ஒப்படைத்தார்.

முன்னதாக கல்காஜி தொகுதியில் பெற்ற வெற்றியை தன்னுடைய ஆதவாளர்களுடன் டெல்லி முதலமைச்சர் அதிஷி சிங் உற்சாகமாக நடனமாடிய காணொளி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சி இழந்து, கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெய்ன், சவுரப் பரத்வாஜ் உள்ளிட்டோர் தோல்வியைத் தழுவிய நிலையில், நாகரிகம் கருதியாவது தனது கொண்டாட்டத்தை தவிர்த்து இருக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Delhi Elections 2025 Atishi Marlena viral video AAAP


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->