ஆக்.6ல் அதிர போகும் டெல்டா மாவட்டங்கள்! எடப்பாடி வெளிட்ட அதிரடி அறிவிப்பு!
Demonstration on behalf of AIADMK in delta districts against Karnataka govt
கர்நாடக அணையில் இருந்து தமிழகத்திற்கு சேர வேண்டிய பங்கு நீரை திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து அதிமுக சார்பில் டெல்டா மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய பங்கு நீரை முறையாக திறந்து விடாததால் டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை மேற்படிப்பு பயிர்கள் கருகி வருகிறது. சுமார் 5 லட்சம் ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்ட குறுவை சாகுபடியில் தற்போது வரை தண்ணீர் இல்லாமல் சுமார் 3.5 லட்சம் குறுவைட நெற்பயிர்கள் கருகி உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே உரிய காலத்தில் கர்நாடக அரசிடம் தண்ணீரைப் பெற முயற்சி மேற்கொள்ளாத திமுக அரசை கண்டித்தும், குறுவை சாகுபடியை பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்க்காமல் துரோகம் செய்த திமுக அரசை கண்டித்தும், உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி உரிய நேரத்தில் நீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்தும், கருகிய பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றிற்கு 35 ஆயிரம் ரூபாயை நிவாரணத் தொகையாக உடனடியாக வழங்கிட திமுக அரசை வலியுறுத்தியும் அதிமுக சார்பில் வரும் அக்டோபர் 6ம் தேதி காலை 10 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜர் தலைமையிலும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் தலைமையிலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தலைமையிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையிலும், கடலூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
English Summary
Demonstration on behalf of AIADMK in delta districts against Karnataka govt