சீனிவாசனை கேவலப்படுத்துவது கோவை மக்களை கேவலப்படுத்துவதற்கு சமம்!...கோவை எம்.பி காட்டம்! - Seithipunal
Seithipunal


கோவை கொடிசியாவில்  தொழில் முனைவோர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அப்போது ஸ்ரீ அன்னபூர்ணா உணவக நிர்வாக இயக்குநர் சீனிவாசன், இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. உள்ளது. ஆனால் காரத்திற்கு 12 சதவீதம் இருக்கும் நிலையில், இந்த முரண்பாடு களையப்பட வேண்டும் என்று கூறினார். 

மேலும்  Bun-க்கு  ஜி.எ.ஸ்.டி இல்லாத நிலையில், அதற்கு உள் வைக்கும் க்ரீமுக்கு 18 சதவீதம் ஜி.எ.ஸ்.டி உள்ளது. இந்த நிலையில், க்ரீமை கொண்டு வா நானே வச்சிக்கிறேன் என்று வாடிக்கையாளர் கூறியதாக தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் கடை நடத்த முடியல மேடம் என்றும், ஒரே மாதிரி வையுங்கள் என்று தனது ஆதங்கத்தை தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் கணபதி ராஜ்குமார் மன்னிப்பு கேட்ட சம்பவம் தொடர்பாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் காட்டமான கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசியுள்ள அவர், உணவக உரிமையாளர் சீனிவாசனை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர் என்றும், யாரும் கேள்வி கேட்க கூடாது என்றால், எதற்காக கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பொதுமக்கள் வந்து செல்லும் இடத்தில், யார் என்ன சாப்பிடுகிறார்கள் என தெரியாதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மன்னிப்பு வீடியோவிற்கு பின் பெரிய கூட்டமே உள்ளதாக தெரிவித்த அவர், உணவக உரிமையாளர் சீனிவாசனை கேவலப்படுத்துவது, கோவை மக்களை கேவலப்படுத்துவதற்கு சமம் என்று தெரிவித்துள்ளார்.

 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Denigrating Srinivasan is tantamount to denigrating the people of Coimbatore MP Kattam


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->