தேவர் சிலை தங்க கவசம் இருவருக்குமே கிடையாது! சாவியே என்கிட்டத்தான் இருக்கு., களத்தில் இறங்கிய பொறுப்பாளர்! - Seithipunal
Seithipunal


பசும்பொன் தேவர் சிலையின் தங்க கவசம் யாரிடம் ஒப்படைக்கப்படும் என்ற விவகாரத்தில், அதிமுக தரப்பில் இருந்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரிடம் நான் தரப்போவதில்லை நானே எடுத்துக்கொள்ள போகிறேன். சாவி என்னிடம் தான் உள்ளது என்று, பசும்பொன் தேவர் நினைவாலே பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவிக்கையில், "தேவர் சிலையின் தங்க கவசம் வங்கியில் உள்ளது. சாவி என்னிடம் உள்ளது. நான் தான் திறப்பேன். அவர் (ஓபிஎஸ்) கையெழுத்து போடுவார்.

தேவர் அனைவருக்கும் பொதுவானவர். அம்மா (மறைந்த முதலவர் ஜெயலலிதா) இருக்கும்போது என்னிடம் நேரடியாகவே பேசுவார். 

அம்மா தான் எங்களுக்கு தங்க கவசத்தை கொடுத்தார்கள். நானே எடுத்துக்கொண்டு செல்கிறேன் என்று கேட்கப் போகிறேன். அவர்கள் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. நான் என்ன செய்ய முடியும். ஆனால் நாங்கள் அனைவருக்கும் பொதுவானார்கள்" என்று காந்தி மீனாள் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Devar Thanga Kavasam Issue Gandhi Meenal Nadarajan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->