சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா.. ஏப்ரல் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்!
Chakkampatti Muthumariamman Temple Chithirai Festival Flag hoisting on April 29
சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா வருகிற ஏப்ரல் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 5 நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவுக்காக குழுமை சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரில் உள்ள பழமை வாய்ந்த சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற இருப்பதை முன்னிட்டு,முன்னேற்பாடாக குழுமை சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் சுந்தரி மற்றும் ,ஊர் பெரியவர்கள் முன்னிலையில் இந்த குழுமை சாற்றுதல் நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு அம்மன் கிரகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து அம்மன் கிரகம் கோவிலை வலம் வந்து, மீண்டும் கோவிலை அடைந்து வழிபாடு நடந்தது. அதனைத் தொடர்ந்து அம்மன் கிரகத்தை எடுத்துச்சென்று அருகாமையில் உள்ள கிணற்றில் குழுமை சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று, அம்மன் பூஞ்சோலை அடைந்தார் .
இதனை அடுத்து சித்திரை திருவிழா நாள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி அடுத்த மாதம் ஏப்ரல் 23 ஆம் தேதி அன்று முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சியும்,ஏப்ரல் 29 ஆம் தேதி அன்று கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது .
இதையடுத்து மே மாதம் 6 ம் தேதி கோவில் திருவிழா துவங்கி, பத்தாம் தேதி வரை ஐந்து நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது .தேனி மாவட்டம் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் நேர்த்திக்கடன் செலுத்தவும், அம்மனை வழிபடவும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடும் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் கிராம மக்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.
English Summary
Chakkampatti Muthumariamman Temple Chithirai Festival Flag hoisting on April 29