10ம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசு..எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வழங்கினார்!
Prizes for students who passed 10th and 12th standard Leader of the Opposition R Shiva delivered
உருளையன்பேட்டை தொகுதியில் திமுக பொதுக்குழு உறுப்பினர் எஸ். கோபால் ஏற்பாட்டில்10ம் வகுப்பு, மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குஎதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
புதுச்சேரி மாநிலம் ,உருளையன்பேட்டை தொகுதி திமுக சார்பில், பொதுக்குழு உறுப்பினர் எஸ். கோபால் ஏற்பாட்டில், 10ம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் 2024–ஆம் ஆண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி கல்வே பங்களாவில் உள்ள திமுக அலுவலகத்தில் நடந்தது.
அப்போது இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் ஊக்கத் தொகையை வழங்கி தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து நாளை முதல் தொகுதி முழுவதும் 10ம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு வீடு, வீடாக சென்று பரிசு மற்றும் ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில், தொகுதி செயலாளர் இரா. சக்திவேல், இலக்கிய அணி அமைப்பாளர் சீனு. மோகன்தாசு, தொகுதி பொருளார் சசிகுமார், துணைச் செயலாளர் முருகன், மாநில வர்த்தகர் அணி துணைத் தலைவர் குரு என்கிற சண்முகசுந்தரம், துணை அமைப்பாளர் ஜெயப்பிரகாஷ், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரெமிஎட்வின், கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவை துணைத் தலைவர் ராஜேஷ், துணை அமைப்பாளர் ஶ்ரீதர், சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் ஐசக் நியூட்டன், ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் அன்பழகன், தொண்டர் அணி துணைத் தலைவர் மதனா, துணை அமைப்பாளர் சேட்டு என்கிற வேல்முருகன், மாணவர் அணி துணை அமைப்பாளர் ஸ்டீபன் ராஜ், அமைப்புசாரா ஓட்டுநர் அணி அஜிபாஷா, வெங்கட், விளையாட்டு மேம்பாட்டு அணி யோகேஷ், தொகுதி செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், நெல்சன், புவியரசு, கிளைச் செயலாளர்கள் கிரி, அன்பு என்கிற அய்யப்பன், பிரகாஷ், அகிலன், ராஜா, சீனுவாசன், வேலு, விஜயகுமார், சுப்பிரமணியன், அந்தோணி, முத்துசாமி, சத்தியமூர்த்தி, சரவணன், இளயநம்பி, வீரப்பன் மற்றும் பெரோஸ், அற்புதராஜ், பாக்கியராஜ், பாலா, வெங்கட்ராமன், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் விமல், தொகுதி நிர்வாகிகள் பில்லா, வேலு, ராஜவேலு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
English Summary
Prizes for students who passed 10th and 12th standard Leader of the Opposition R Shiva delivered