குண்டுக்கட்டாக அதிமுகவில் இருந்து 6 முக்கிய புள்ளிகள் நீக்கம்.! ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் கூட்டாக இன்று விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது,

"திண்டுக்கல் மேற்கு மாவட்டம் கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், 

கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், 

திண்டுக்கல் மேற்கு மாவட்டம், கழகத்தைச் சேர்ந்த குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து, திமுக -விற்கு ஆதரவாக செயல்பட்ட காரணத்தினாலும்,

திருமதி P. காஞ்சனா, (குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியக் குழு 5 - வது வார்டு உறுப்பினர்) 
திருமதி R. அன்னபூர்ணம். (ஊராட்சி ஒன்றியக் குழு 4 - வது வார்டு உறுப்பினர், குஜிலியம்பாறை மேற்கு ஒன்றியக் கழக இணைச் செயலாளர்) 
திரு. K.M. பொன்னுச்சாமி, (ஊராட்சி ஒன்றியக் குழு 7 - வது வார்டு உறுப்பினர், குஜிலியம்பாறை மேற்கு ஒன்றியக் கழக துணைச் செயலாளர்) 
திரு. M. பழனிவேல், (ஊராட்சி ஒன்றியக் குழு 9 - வது வார்டு உறுப்பினர், குஜிலியம்பாறை கிழக்கு ஒன்றியக் கழக மாவட்டப் பிரதிநிதி) 
திருமதி G. செந்தில்வடிவு, (ஊராட்சி ஒன்றியக் குழு 11 - வது வார்டு உறுப்பினர், குஜிலியம்பாறை கிழக்கு ஒன்றிய மகளிர் அணி துணைச் செயலாளர்) 
திரு . R. ஸ்டாலின், (குஜிலியம்பாறை மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் . இளைஞர் அணிச் செயலாளர்) 

ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம்."

இவ்வாறு அந்த அறிவிப்பில் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி K. பழனிசாமி தெரிவித்துள்ளனர். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DINDUGUL ADMK Members


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->