குடியில் நடக்கும் ஆட்சி.. கலாய்த்த பாஜக எம்.பி.! நாடாளுமன்றத்தில் சிரிப்பலை.!
Disrupted BJP MP laughter in Parliament
நாடாளுமன்ற மக்களவையில் பெண் எம்.பி.யின் பேச்சைக் கேட்டு பலரும் சிரித்துள்ளனர். ஹர்சிம் ரத் கவுர் பாதல் எம்.பி நாடாளுமன்ற மக்களவையில் பேசிய போது, "பஞ்சாப் முதல்வரான பகவந்த் மான் எம்பி யாக இருந்த பொழுது மக்களவையில் ஒரு மூலையில் அமர்ந்திருப்பார். அவர் எதற்காக ஓரமாக உட்காருகிறார் என்றால் மது அருந்தி விட்டு வந்திருப்பார்.
இதனால் அவருக்கு அருகில் மற்ற உறுப்பினர்கள் உட்கார மாட்டார்கள். எனவே, தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையை விட்டுவிட்டு மூளையில் சென்று அமர்வார். குடிபோதையில் நாடாளுமன்றத்திற்கு வந்த நபர் இன்று ஆட்சியை நடத்தி வருகின்றார். நாடாளுமன்ற அவை நடவடிக்கையை அவர் செல்போனில் வீடியோ எடுத்தார்.
அப்போது சபாநாயகர் அவரை வெளியேற்றினார் இவரது நடவடிக்கைகளின் காரணமாக நாடாளுமன்றத்திற்குள் எப்படி நுழையலாம்? எப்படி தப்பிக்கலாம்? என எதிரிகள் கூட கண்டறியலாம். குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டக்கூடாது என்று தெருக்களில் எழுதி வைத்துக்கொண்டு குடித்துவிட்டு ஆட்சி நடத்துகிறார்கள்.
2019 பஞ்சாப் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என மதுவை தொட மாட்டேன் என முடிவெடுத்தார். ஆனால், 10 மாதமாக பஞ்சாபில் என்ன நடக்கிறது என்பதை இந்தியாவே பார்த்துக் கொண்டிருக்கிறது." என்று கூறினார். இதை கேட்ட நாடாளுமன்ற எம்பிகள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பலரும் சிரித்தனர்.
English Summary
Disrupted BJP MP laughter in Parliament