தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட முடியாது! டி.கே சிவக்குமார் மீண்டும் திட்ட வட்டம்!! - Seithipunal
Seithipunal


கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு சேர வேண்டிய பங்கு நீரை வரும் நவம்பர் 1ம் தேதி முதல் நவம்பர் 15ம் தேதி வரை வினாடிக்கு 2,600 கன அடி வீதம் திறக்க வேண்டும் காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இந்த நிலையில் தமிழகத்திற்கு சேர வேண்டிய நீரை திறந்த விட முடியாது என கர்நாடக மாநில துணை முதலமைச்சரும், கர்நாடக நீர்வல்துறை அமைச்சருமான டி.கே சிவக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் "தமிழகத்திற்கு தேவையான நீரை திறந்து விடும் அளவுக்கு கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை. தற்போது கர்நாடக அணைகளில் மொத்தமாக 551 டிஎம்சி நீர் மட்டுமே இருப்பில் உள்ளது. இது கர்நாடக குடிநீர் தேவைக்கு மட்டுமே போதுமானது. எனவே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்த விட முடியாது" என திட்டமிட்டமாக தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DKSivakumar strictly said cannot open cauvery water to Tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->