தேமுதிக சார்பில் இப்தார் நோன்பு விழா.!
DMDK Iftar fasting festival
தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் வரும் 29 ஆம் தேதி ஏர்வாடியில் இப்தார் நோன்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"ஒவ்வொரு ஆண்டும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு இஸ்லாமியர்களின் புனித தலமான ஏர்வாடியில் வரும் 29-ந்தேதி மாலை 5 மணியளவில் இப்தார் நோன்பு விழா நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் தே.மு.தி.க. பொருளார் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொள்கிறார். இதில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய சகோதார, சகோதரிகளும் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டும்"
இவ்வாறு அந்த அறிக்கையில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
English Summary
DMDK Iftar fasting festival