"யோக்கியனு சொல்வாங்க".. ஆனா விஞ்ஞான ஊழலில் கில்லாடி.. திமுகவை தாக்கிய பிரேமலதா.!!
DMDK premalatha criticized DMK mkStalin in Trichy
மக்களவைப் பொதுத் தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. 40 தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஒரே மேடையில் ஏற்றிய இடப்பாடி பழனிச்சாமி மக்கள் முன்பு அனைவரையும் அறிமுகப்படுத்தினார்.
இந்த கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த எஸ்டிபிஐ, தேமுதிக புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
பொதுக்கூட்ட மேடையில் பேசிய பிரமலதா விஜயகாந்த் "இது ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் என்றே எடப்பாடி யார் சொன்ன ஆனால் இங்கு வந்து பார்த்தபோது இது பொதுக்கூட்டமாக அல்லது மாநாடு என்று கேட்க தோன்றுகிறது. திருச்சி என்றாலே திருப்பம் மாவட்டம். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி, புரட்சிக்கலைஞர் என மூவரும் மக்களுக்காக வாழ்ந்தவர்கள்.
ஆனால் எதிர் தரப்பில் இருப்பவர்கள் ரவுடியிசத்தை, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை ஏற்படுத்தி மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்துகிறார்கள்.
எடப்பாடியார் ஆட்சியிலும் கொரோனா, மழை வெள்ளம் வந்தது, ஆனால் அதை அழகாக கையாண்டார். எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லும் திமுக எதற்காக இங்கு ஆட்சியில் இருக்கிறது? திருத்தப்பட்டு குடியுரிமைச் சட்டத்தை மத்திய பாஜக அரசு அமல்படுத்தியுள்ளது. இஸ்லாமிய மக்களே நிச்சயமாக இந்த கூட்டணி உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.
தங்களை யோக்கியன் என சொல்லும் திமுக விஞ்ஞான ஊழல் செய்வதில் கில்லாடிகள். தேர்தல் பத்திரம் மூலம் லாட்டரி மாற்றம் இடம் 509 கோடி ரூபாயை திமுக பெற்றுள்ளது. இந்தியாவிலேயே அதிகம் பணம் பெற்றது பாஜக, தமிழகத்தில் திமுக. இதை வெளி கொண்டு வர உதவிய நீதிபதிகளுக்கு ராயல் சல்யூட்" என திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.
English Summary
DMDK premalatha criticized DMK mkStalin in Trichy