விருதுநகர் தோல்வி - டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரியை சந்திக்கிறார் விஜய பிரபாகரன்!
DMDK Vijaya Prabakaran Will Meet Chief Electio Comissionor in Delhi Today
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையில் போட்டியிட்ட இந்தியா கூட்டணியினர் 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றுள்ளனர். மறைந்த நடிகர் விஜயகாந்தின் கட்சியான தேமுதிக, திமுகவின் எதிர் கூட்டணியான அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது.
தேமுதிக கட்சி சார்பில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், விருது நகர் தொகுதியில் போட்டியிட்டார். அத்தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூரை எதிர்த்து போட்டியிட்ட விஜய பிரபாகரன், 4379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது. எனவே விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு இ - மெயிலில் புகாரளித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய பிரேமலதா, 50 - 60 வருடமாக கட்சி நடத்தும் நீங்கள் முதல் முறையாக தேர்தலில் நிற்கும் ஒரு சின்ன பையனை ஜெயிக்க வைத்தால் தான் என்ன? என்ற ரீதியில் பேசி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டெல்லி சென்றுள்ள விஜய பிரபாகரன், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து, விருதுநகர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது முறைகேடு நடந்துள்ளது. எனவே அங்கு மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.
English Summary
DMDK Vijaya Prabakaran Will Meet Chief Electio Comissionor in Delhi Today