ஈரோடு கிழக்கில், ஆடிப்பாடி வாக்கு சேகரித்த விஜயகாந்த் டூப்.! கவர்ந்திழுக்கப்படும் மக்கள்.!  - Seithipunal
Seithipunal


வருகின்ற பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு மாவட்ட சட்டமன்ற தொகுதிக்கான  இடைத்தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற இருக்கின்றன. இதற்காக அங்கு போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.  கட்சியை சார்ந்து வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 77 வேட்பாளர்கள் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் களம் காண்கின்றனர்.

ஆளும் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் இ வி கே எஸ் இளங்கோவன் அ இ அ தி மு கவின் சார்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு  தேமுதிக சார்பில் ஆனந்த் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ரேணுகா உட்பட 77 பேர் அந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். 

போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டு  வாக்காளர்கள் வாக்களிக்க உள்ள 238 வாக்குச்சாவடிகளிலும்  தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

வாக்களிப்பிற்கான நாள் நெருங்கி வருவதால்  அனைத்துக் கட்சியினரும் ஈரோட்டில் முகாமிட்டு தங்கள் கட்சியின் வேட்பாளர்களுக்கு தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தேமுதிக சார்பில் போட்டியிடும் ஆனந்த்துக்கு வாக்கு சேகரிக்கும் முயற்சியில் தேமுதிகவினர் மேடை அமைத்து விஜயகாந்த் வேடமிட்டு ஆடி, பாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இது பலரையும் கவரும் விதமாக இருந்தது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dmdk volunteers dance Like Vijayakanth In Erode east


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->