சேலத்தில் பரபரப்பு! விபத்தில் சிக்கிய திமுக நகர மன்ற தலைவர்! மருத்துவமனையில் அனுமதி.!! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்ட குமாரபாளையம் திமுக நகர மன்ற தலைவர் விஜய் கண்ணன் தனது ஆதரவு கவுன்சிலர்கள் 9 பேருடன் இன்று தலைமறைவானதாக தகவல் வெளியானது. திமுகவில் குமாரபாளையம் நகர செயலாளர் பதவி மற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்த விஜய் கண்ணன் அதிமுகவில் இணைய உள்ளதாக பரவலாக பேசப்பட்டது.

இந்த நிலையில் திமுகவில் பதவி கிடைத்தால் மட்டுமே டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்வை எடுத்து நடத்த முடியும் எனவும் திமுகவில் முக்கிய நிர்வாகிகள் குறித்து அவதூறாக பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் தான் தனது ஆதரவு கவுன்சிலர்கள் 9 பேருடன் சேலத்தில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைய தனது ஆதரவு கவுன்சிலர்களுடன் விஜய் கண்ணன் சேலம் நோக்கி சென்றுள்ளார்.

அப்போது சேலம் மாவட்டம் மின்னம்பள்ளி பகுதியில் அதிமுகவில் இணைய வந்த திமுக நகர மன்ற தலைவர் விஜய் கண்ணன் மற்றும் அவருடன் 4 திமுக கவுன்சிலர்கள் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த திமுக நகர மன்ற தலைவர் விஜய் கண்ணன் மற்றும் திமுக கவுன்சிலர்கள் 4 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தற்செயலாக நடைபெற்றதா அல்லது அரசியல் ரீதியில் நடந்த சதி செயலா என்ற சந்தேகம் நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுகவில் இணையறந்த திமுக நகர மன்ற தலைவர் விபத்தில் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK chairman met with car accident in salem


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->