பதவி சுகத்திற்காக "கரப்பான் பூச்சி" மாதிரி ஊர்ந்து போனீங்களே.. உங்கள் பெயரை வைக்க முடியுமா? - முதல்வர் ஸ்டாலின் பதிலடி! - Seithipunal
Seithipunal


கடந்த இரு தினங்களுக்கு முன், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்த அறிக்கையில், "அதிமுக ஆட்சியில் மக்கள் நலனுக்காகத் தொடங்கப்பட்ட திட்டங்கள் என்ற ஒரே காரணத்திற்காக, திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 42 மாதங்களில், பல திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால், அவை முழுமையாக முடிக்கப்படாமலும், கிடப்பிலும் போடப்பட்டுள்ளன.

மக்கள் நலத் திட்டங்களுக்கான மூலதனச் செலவுகளை மேற்கொள்ளாமல், அத்தியாவசியமற்ற செலவுகளை திரு. ஸ்டாலினின் தலைமையிலான திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது. தமிழக மக்களுக்கு சிறிதும் பயனளிக்காத கார் ரேஸ் நடத்தப்படுகிறது. திரு. கருணாநிதி பெயரில் அவசியமற்ற பணிகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படுகின்றன" என்று விமர்சித்து இருந்தார்.

இந்த நிலையில், "தமிழகத்திற்காக 80 ஆண்டுகள் ஓயாமல் உழைத்த கலைஞரின் பெயரை மக்கள் நலத்திட்டங்களுக்கு வைக்காமல், வேறு யார் பெயரை வைப்பது? பதவி சுகத்திற்காக கரப்பான் பூச்சி மாதிரி ஊர்ந்து போனீங்களே உங்கள் பெயரை வைக்க முடியுமா? என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, முதலமைச்சர் முக ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

மக்கள் நலத் திட்டங்களுக்கு மூலதன செலவுகளை செய்யவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். எடப்பாடி பழனிச்சாமி அளவுக்கு பொய் சொல்லக்கூடாது" என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK CM MKStalin reply to ADMK Edappadi Palanisamy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->