#BREAKING | ஒன்று கூடும் திமுகவின் முக்கிய புள்ளிகள் - வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலின் முடிவுகள் ஜூன் நான்காம் தேதி வெளியாக உள்ள நிலையில், வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி காணொளி காட்சி வாயிலாக திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

இது குறித்து அவரின் அறிவிப்பையில், திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை குறித்து கலந்தாலோசித்திட, கழக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி அவர்கள் தலைமையில், மாவட்டச் செயலாளர்கள், கழக வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம், வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி, சனிக்கிழமை, காலை 11 மணியளவில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது. 

இந்த கூட்டத்தில் திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர் இளங்கோ எம்.பி, வாக்கு எண்ணிக்கையின் போது தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்குவார். 

அப்போது மாவட்ட கழகச் செயலாளர்கள், கழக வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் மற்றும் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே இந்தியா கூட்டணி கூட்டணியில் உள்ள தலைவர்கள் வருகின்ற ஒன்றாம் தேதி டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர், வாக்கு எண்ணிக்கை,  தேர்தல் முடிவுகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள திமுக தலைவரும் முதலமைச்சர் ஸ்டாலின் 1ம் தேதி டெல்லிக்கு செல்ல உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK District Heads meet Election 2024


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->