ஆளுநரின் தேநீர் விருந்தில் ஸ்டாலின் பங்கேற்றது ஏன்..? திமுக தரப்பின் மழுப்பலான விளக்கம்..!! - Seithipunal
Seithipunal


தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 21 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காததை கண்டித்து திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விடுதலை சிறுத்தை போன்ற கட்சிகள் ஆளுநர் அளிக்கும் குடியரசு தின தேனீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தன.

ஆனால் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள் தமிழக ஆளுநருக்கு எதிரான நிலைபாட்டில் இருந்து மாறி ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொண்ட விவகாரம் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி திராவிட சித்தாந்தத்திற்கு எதிராகவும் தமிழக மக்களுக்கு எதிராகவும் செயல்படுவதாக தமிழக முதல்வரும், திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் குற்றம் சாட்டி வந்த நிலையில் ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொண்டது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் குறித்து திமுகவின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் "ஆளுநர் விவகாரத்தில் திமுக இரட்டை நிலைப்பாடு ஏதும் எடுக்கவில்லை.

தமிழக ஆளுநர் குடியரசு தின தேநீர் விருந்துக்கு முறையாக அழைத்துள்ளார். அந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசு என்றும் தமிழக அரசின் முத்திரையும் இடம் பெற்றுள்ளது. கடந்த முறை செய்யத் தவறியதை இந்த முறை ஆளுநர் சரி செய்திருக்கிறார். எனவே குடியரசு தின விழாவை புறக்கணிப்பது சரியாக இருக்காது. ஆளும் கட்சியாக திமுக இருப்பதால் ஆளுங்கட்சிக்கு என்று ஒரு பொறுப்பு இருக்கிறது. அந்த வகையில் கலந்து கொள்கிறோம்" என விளக்கம் அளித்துள்ளார்.

தமிழர்களுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக குற்றம் சாட்டிய திமுக தரப்பு தேநீர் விருந்தில் கலந்து கொண்டதற்கு மழுப்பலான விளக்கத்தை அளித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK explained CM Stalin participation in Governor tea party


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->