பேராசிரியர் அன்பழகன் உடல்நிலை! வெளியான மருத்துவமனை தகவலால், அவசர அவசரமாக விரைந்த திமுகவினர்!  - Seithipunal
Seithipunal


98 வயதாகும் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று (பிப்ரவரி 24) அனுமதிக்கப்பட்ட நிலையில்,தொடர் சிகிச்சையில் இருக்கும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

திமுக தலைவர் ஸ்டாலின் பேராசிரியர் அன்பழகனை நேற்றும், இன்றும் மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அவரிடம் பேசிய மருத்துவர்கள் அன்பழகனுக்கு செயற்கை சுவாசக் கருவி வைத்திருப்பதாகவும், நேற்று இரவு முதல் கண் திறக்கவில்லை எனவும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை முதலே, திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனைக்கு அவசரம் அவசரமாக விரைந்து வந்து பார்த்து செல்கின்றனர். பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என். நேரு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள்அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று அன்பழகன் உடல் நிலை குறித்து கேட்டறிந்தனர். 

இன்று காலை திருச்சியில் இருந்து சென்னை வந்த முதன்மை செயலாளர் நேரு அறிவாலயம் வழியே சென்றாலும், அறிவாலயத்துக்கு செல்லாமல் நேராக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பேராசிரியர் அன்பழகன்  கோமா நிலைக்கு சென்ருவிட்டதாகவும், அவ்ரவ் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. . இதனால் திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கவலை அடைந்து சோகமான முகத்துடன் காணப்படுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK General Secretary anbazhagan health condition


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->