ஓரங்கட்டப்பட்டதா திமுக.? I.N.D.I.A கூட்டணியில் ஆதிக்கம் செலுத்தும் வடமாநில கட்சிகள்.!! - Seithipunal
Seithipunal


எதிர்க்கட்சிகள் மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நேற்று தொடங்கி இன்று நிறைவடைந்த நிலையில் பல்வேறு முக்கிய முடிவுகள் எட்டப்பட்டன. இந்த ஆலோசனை கூட்டத்தில் 28 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 63 தலைவர்கள் உட்பட 6 மாநில முதல்வர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பாக "இயன்றவரை ஒன்றாக போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளோம், வெவ்வேறு மாநிலங்களிலும் தொகுதி பகிர்வு உடனடியாக தொடங்கப்பட்டு, கொடுக்கல் வாங்கல் ஒத்துழைப்போடு கூடிய விரைவில் முடிவெடுக்கப்படும்" எனக் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியா கூட்டணியில் பிரதான மாநில கட்சியாக விளங்கும் என எதிர்பார்க்கப்பட்ட திமுகவுக்கு எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லையோ என்ற கேள்வி எழுகிறது. இதற்கு காரணம் இந்தியா கூட்டணியால் தேர்தல் பணிக்காக உருவாக்கப்பட்ட 6 குழுக்களில் 2 குழுவில் மட்டுமே திமுகவின் பிரதிநிதியாக முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர் பாலு இடம்பெற்றுள்ளார்.

நாடாளுமன்ற நிலைக்குழுவில் இடம்பெற்றிருந்த தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழி தேர்தல் பணி குழுக்களில் இடம்பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று பாஜகவை கடுமையாக எதிர்த்து வரும் திமுக துணை பொதுச்செயலாளரும் நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவும் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி இந்தியா கூட்டணியின் தேர்தல் குழுக்கள் பின்வருமாறு,

ஒருங்கிணைப்பு மற்றும் தேர்தல் வியூக குழு:

1. K.C வேணுகோபால், INC

2. சரத் ​​பவார், NCP

3. டி.ஆர்.பாலு, DMK

4. ஹேமந்த் சோரன்,JMM

5. சஞ்சய் ரவுத், SS

6.தேஜஸ்வி யாதவ், RJD

7. அபிஷேக் பானர்ஜி, TMC

8. ராகவ் சத்தா, AAP

9. ஜாவேத் அலி கான், SP

10. லல்லன் சிங், JD(U)

11. டி ராஜா, CPI

12. உமர் அப்துல்லா, NC

13. திருமதி. மெகபூபா முஃப்தி, PDP

14. CPI-M

பிரச்சாரக் குழு:

1.  குர்தீப் சிங் சப்பல், INC

2. சஞ்சய் ஜா, JD(U)

3. அனில் தேசாய், SS

4. சஞ்சய் யாதவ், RJD

5.  பிசி சாகோ, NCP

6. சம்பை சோரன், JMM

7. கிரண்மோய் நந்தா, SP

8. சஞ்சய் சிங், AAP

9. அருண்குமார், CPI(M)

10. பினோய் விஸ்வம், CPI

11. நீதிபதி (ஓய்வு) ஹஸ்னைன் மசூடி, NC

12. ஷாஹித் சித்திக், RLD

13. என்.கே.பிரேமச்சந்திரன், RSP

14. ஜி. தேவராஜன், AIFB

15. ஷ. ரவி ராய், CPI(M)

16. திருமாவளன், VCK

17. கே.எம்.காதர் மொய்தீன், TMMP

18. ஜோஸ் கே. மணி, KC(M)

19. TMC 

சமூக ஊடங்களுக்கான பணி குழு:

1. செல்வி சுப்ரியா ஸ்ரீநேட், INC

2. சுமித் ஷர்மா, RJD

3. ஆஷிஷ் யாதவ், SP

4. ராஜீவ் நிகம், SP

5. ராகவ் சத்தா, AAP

6. செல்வி அவிந்தானி, JMM

7. செல்வி இல்திஜா மெஹபூபா, PDP

8. பிரஞ்சால், CPM

9. டாக்டர் பால்சந்திரன் காங்கோ, CPI

10. செல்வி இஃப்ரா ஜா, NC

11. ஷ.வி அருண் குமார், CPI(ML)

12. TMC

ஊடகத்திற்கான பணிக்குழு:

1. ஜெய்ராம் ரமேஷ், INC

2. மனோஜ் ஜா, RJD

3. அரவிந்த் சாவந்த், SS

4. ஜிதேந்திர அஹ்வாத், NCP

5. ராகவ் சத்தா, AAP

6. ராஜீவ் ரஞ்சன், JD(U)

7. ஷ. பிராஞ்சல், CPM

8. ஆஷிஷ் யாதவ், SP

9. சுப்ரியோ பட்டாச்சார்யா, JMM

10. அலோக் குமார், JMM

11. மணீஷ் குமார், JD(U)

12. ராஜீவ் நிகம், SP

13. டாக்டர் பால்சந்திரன் காங்கோ, CPI

14. தன்வீர் சாதிக், NC

15. பிரசாந்த் கன்னோஜியா

16. ஷ. நரேன் சாட்டர்ஜி, AIFB

17. திருமதி. சுசேதா டி, CPI(ML)

18.  மோஹித் பான், PDP

19. TMC

தேர்தல் ஆராய்ச்சிக்கான பணிக்குழு:

1. அமிதாப் துபே, INC

2. பேராசிரியர் சுபோத் மேத்தா, RJD

3. செல்வி பிரியங்கா சதுர்வேதி, SS

4. செல்வி வந்தனா சவான், NCP

5.  KC தியாகி, JD(U)

6. சுதிவ்யா குமார் சோனு, JMM

7. செல்வி ஜாஸ்மின் ஷா, AAP

8. அலோக் ரஞ்சன், SP

9. இம்ரான் நபி தார், NC

10. விளம்பரம். ஆதித்யா, PDP

11. TMC என 6 குழுக்கள் நாடாளுமன்ற பொது தேர்தலுக்காக இந்தியா கூட்டணியால் நியமனம் செய்யப்பட்டுள்ளது. மேலே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் பெரும்பாலும் வட மாநிலத்தைச் சேர்ந்த கட்சிகளே இடம் பெற்றுள்ளதால் திமுக இந்தியா கூட்டணியில் இருந்து புறக்கணிக்கப்படுகிறதோ? என்ற சந்தேகம் எழுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK is in only 2 out of 6 election groups of India Alliance


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->