எடப்பாடியை புறந்தள்ளி ஓ.பி.எஸ்-ஐ அங்கீகரிக்கும் திமுக.? இ.பி.எஸ் தரப்பினர் அதிர்ச்சி.!
dmk it wing post make controversy
கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுகவில் இருந்து கோவை செல்வராஜ் விலகிய நிலையில் தற்போது ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து இருக்கிறார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த கோவை செல்வராஜ், "கோவை மாவட்ட அதிமுகவிலிருந்து 5000 பேரை திமுகவில் இணைக்க இருக்கின்றோம். திமுகவின் ஆட்சி அமைய தொடர்ந்து செயல்படுவோம்." என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், தற்போது திமுக தகவல் தொடர்பு சமூக வலைதள பக்கத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி, "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில், அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளரும் - கோவை மாவட்டச் செயலாளருமான கோவை கே.செல்வராஜ், Ex. M.L.A, தலைமையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த கோவை மாநகர் மாவட்ட பொருளாளர் கே.ரங்கராஜ்- கோவை மாவட்ட ஓட்டுநர் அணியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் கோவை பாரதி - துணைச் செயலாளர் டெம்போ பாலு- பொருளாளர் ஏ.லாரன்ஸ் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்."என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓ.பி.எஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ் ஓ.பி.எஸ் அதிமுகவை விட்டு விலகிய போது அவருடன் வெளியேறியவர். எனவே, அவர் அதிமுகவின் கோவை மாவட்டச் செயலாளர் என்ற திமுகவின் கூற்று தவறானது. தற்போது திமுகவில் இணைந்துள்ள மற்ற பொறுப்பாளர்களும் ஓ.பி.எஸ் அணியை சேர்ந்தவர்கள் தான்.
இ.பி.எஸ் அணியை அதிமுகவாக அங்கீகரிக்காத திமுக, ஓ.பி.எஸ் அணியை அங்கீகரிக்கும் விதமாக பதிவிட்டுள்ளது. தற்போது, இ.பி.எஸ் ஆதரவாளர்கள் மத்தியில் கண்டனங்களை குவித்து வருகின்றது.
English Summary
dmk it wing post make controversy