2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை.! - Seithipunal
Seithipunal


2024 நாடாளுமன்றத் தேர்தல் குறித்து திமுக வாக்குச்சாவடி முகவர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

நாட்டின் 18வது நாடாளுமன்ற தேர்தல் வரும் 2024 ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும் என கடந்த மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கழக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார்.

மேலும், 2 மாதத்திற்குள் பூத் கமிட்டி அமைக்கும் பணியை முடிக்க மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது திமுக வாக்குச்சாவடி முகவர்களுடன் அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அந்த வகையில் 234 சட்டபேரவை தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி முகவர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்று வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK leader MK Stalin discuss with Polling Agent about parliament election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->