மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதி நடைபெற்றது. 12,819 வார்டு கவுன்சிலர் பதவிக்கு அமைதியான முறையில் மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தியது. 

ஓட்டு எண்ணிக்கை கடந்த 22ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. இதையடுத்து, வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்கள் நேற்று கவுன்சிலர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். நாளை மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஒட்டுமொத்த உள்ள 21 மாநகராட்சிகளில், கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவியை மட்டும் காங்கிரசுக்கு திமுக ஒதுக்கியுள்ளது. மற்ற 20 மாநகராட்சிகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தற்போது திமுக வேட்பாளர்களின் பட்டியலை திமுக தலைமை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக வேட்பாளராக பிரியா அறிவிக்கப்பட்டுள்ளார். துணை மேயர் பதவிக்கு மகேஷ் குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கான திமுக வேட்பாளர் வேட்பாளராக இந்திராணி என்பவர் போட்டியிடுகிறார். திருச்சி மாநகராட்சி மேயர் பதவிக்கான திமுக வேட்பாளராக அன்பழகன் போட்டியிடுகிறார். திருச்சி துணை மேயராக திவ்யா தனகோடி போட்டிருக்கிறார். 

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பதவிக்காக வி எம் சரவணன் போட்டியிடுகிறார். துணை மேயராக கே ஆர் ராஜா போட்டியிடுகிறார். கோவை மாநகராட்சியில் திமுக மேயர் வேட்பாளராக கல்பனா போட்டியிடுகிறார். துணை மேயராக வெற்றி செல்வன் போட்டியிடுகிறார். 

சேலம் மாநகராட்சி மேயராக ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். திருச்சி மாநகராட்சி மேயராக தினேஷ்குமார் போட்டியிடுகிறார். ஈரோடு மாநகராட்சி மேயராக நாகரத்தினம் போட்டியிடுகிறார். துணை மேயராக செல்வராஜ் போட்டியிடுகிறார். 

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் போட்டியிடுகிறார். துணை மேயராக ஜெனிட்டா செல்வராஜ் போட்டியிடுகிறார். ஆவடி மாநகராட்சி மேயராக ஜி உதயகுமார் போட்டியிடுகிறார். தாம்பரம் மாநகராட்சி மேயராக வசந்தகுமாரி கமலக்கண்ணன் போட்டியிடுகிறார். துணை மேயராக காமராஜ் போட்டியிடுகிறார். 

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக மகாலட்சுமி யுவராஜ் போட்டியிடுகிறார். வேலூர் மாநகராட்சி மேயராக சுஜாதா ஆனந்த் குமார் போட்டியிடுகிறார். துணை மேயராக சுனில் போட்டியிடுகிறார். கும்பகோணம் மாநகராட்சி துணை மேயராக தமிழழகன் போட்டியிடுகிறார். 

கரூர் மாநகராட்சி மேயராக கவிதா கணேசன் போட்டியிடுகிறார். துணை மேயராக தாரணி பி சரவணன் போட்டியிடுகிறார். ஓசூர் மாநகராட்சி மேயராக சத்யா போட்டி போட்டியிடுகிறார். துணை மேயராக அனந்தைய்யா போட்டியிடுகிறார். திண்டுக்கல் மாநகராட்சி மேயராக இளமதி போட்டிருக்கிறார். துணை மேயராக ராஜப்பா போட்டியிடுகிறார். 

சிவகாசி மாநகராட்சி மேயராக சங்கீதா இன்பம் போட்டியிடுகிறார். துணை மேயராக விக்னேஷ் பிரியா போட்டிருக்கிறார். நாகர்கோவில் மாநகராட்சி மேயராக மகேஷ் போட்டியிடுகிறார். துணை மேயராக மேரி பிரின்சி போட்டியிடுகிறார். கடலூர் மாநகராட்சி மேயராக சுந்தரி போட்டியிடுகிறார். தஞ்சாவூர் மாநகராட்சி மேயராக ராமநாதன் போட்டியிடுகிறார். துணை மேயராக அஞ்சுகம் பூபதி போட்டியிடுகிறார் என திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Mayor candidates list


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->