திருட்டு வழக்கில் திமுக நிர்வாகி கைது! அடேங்கப்பா இது நவீனவகை திருட்டால இருக்கு! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம் : ரூ.10 லட்சம் மதிப்பு மின் வயர்கள் திருடிய வழக்கில் திமுக நிர்வாகி ஆண்ட்ரூஸ் அலெக்சாண்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், கீழானூர் பகுதி விவசாய நிலங்களில் உள்ள மின் கம்பங்களில் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின் ஒயர்கள் திருடப்பட்டதாக புகார் எழுந்தது. 

இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், திருடு நடந்த பகுதியில், மின் ஒயர்களை மாற்றி அமைக்கும் பணியில் ஈடுப்பட்ட ஒப்பந்ததாரரும், திமுக நிர்வாகியுமான ஆண்ட்ரூஸ் அலெக்சாண்டர் மற்றும் துணை மின் நிலையத்தின் ஒப்பந்த ஊழியர்கள் 5 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும்,அவர்களிடம் இருந்த வயர் கட்டர்களை பறிமுதல் செய்த போலீசார் சம்பவம் குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(பிரபல தனியார் செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் அடிப்படையில் மேற்காணும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது)


மேலும் ஓரு முக்கிய செய்தி : கரும்பு கொண்டு வரும் டிராக்டர்களுக்கு 1500 ரூபாய் கட்டணம் வசூலிப்பது, உழவர் சந்தை நோக்கத்தையே வீழ்த்தி விடும் என்று, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். 

சேலம் உழவர் சந்தையில் கரும்பு கொண்டு வரும் டிராக்டர்களுக்கு 1500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், வார சந்தைக்கு வரும் வாகனங்களிடம் வசூலிக்கும் கட்டணத்துக்கு எந்த ரசீதும் வழங்கப்படுவதில்லை என்று தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி அவர்கள் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், நியாயமான கட்டணம் வசூலிப்பதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும் என்று, சேலம் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Member Arrest Foe Robbery case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->