திமுக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான நில அபகரிப்பு வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
DMK Minister Land Scam Case Chennai HC
சென்னை உயர் நீதிமன்றம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என்று மறுத்து உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு, சென்னை கிண்டி சிட்கோ பகுதியில் வசிப்பிடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட எஸ்.கே.கண்ணன் என்பவரின் நிலம் போலி ஆவணங்கள் மூலம் மா.சுப்பிரமணியன் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்குறியது. இந்த புகாரின் அடிப்படையில், அதிமுக ஆட்சியில் அவருக்கு எதிராக நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தற்போதும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதை ரத்து செய்யக் கோரி மா.சுப்பிரமணியன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அவரது தரப்பில், “1998-ம் ஆண்டிலேயே இந்த நிலம் வாங்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அரசியல் காரணங்களால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த நேரத்தில் நான் மாநகராட்சி கவுன்சிலராக இருந்தேன். இந்த இடத்தை வாங்கியதனால் சிட்கோவுக்கோ அரசுக்கோ எந்த இழப்பும் இல்லை” என்று வாதிடப்பட்டது.
காவல்துறை தரப்பில், குற்றச்சாட்டுகள் நீதிமன்ற விசாரணையால் மட்டுமே முடிவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. புகார்தாரரின் தரப்பும் வழக்கை ரத்து செய்யக் கூடாது என வாதிட்டது.
அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.வேல்முருகன், வழக்கை ரத்து செய்யும் கோரிக்கையை நிராகரித்து, சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை தொடருமாறு உத்தரவிட்டார்.
English Summary
DMK Minister Land Scam Case Chennai HC