திமுக அமைச்சர் பொன்மொடி மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின்  உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக, கடந்த 2006-ஆம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர்.

இந்த சொத்துகுவிப்பு தொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 

இந்நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி பூர்ணிமா முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது இந்த வழக்கிற்காக ஓய்வுபெற்ற டி.எஸ்.பி. சரவணன் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இதனை அடுத்து, இந்த வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதி பூர்ணிமா உத்தரவு பிறப்பித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Minister Ponmodi property accumulation case investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->