இழிவான செயல்... இதயத்தை நொறுங்கச் செய்யுதே..! தயவு தாட்சன்யமின்றி நடவடிக்கை எடுங்க - கொந்தளிக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சுப்ரமணியசுவாமி திருக்கோவில் மலைப்பாதையில் சுவாமி சிலைகளை மர்ம நபர்கள் உடைத்து உள்ளனர். இதற்க்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "பெருமைமிகு நமது விராலிமலை அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவில் மலைப்பாதையில் சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் இதயத்தை நொறுங்கச் செய்கிறது.
 
கடும் கண்டனத்துக்குரிய இழிவான இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது தயவு தாட்சன்யமின்றி கடும் நடவடிக்கையை எடுத்திட வேண்டும்.

விராலிமலை முருகனை தரிசிக்க தமிழ்நாடு முழுவதுமிருந்து வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக, மலையேற சிரமப்படும் பக்தர்கள் கவலைபோக்கிட அதிமுக ஆட்சியில் எழில்மிகு சுவாமி சிலைகளுடன் விசாலமான மலைப்பாதை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 3 வருடங்களில் மட்டும் மூன்று முறை இதுபோன்ற விரும்பத்தகாத செயல்கள் நடைபெற்று பக்தர்களை அச்சம் கொள்ள செய்திருக்கிறது.

சிரமேற்கொண்டு அமைக்கப்பட்ட மலைப்பாதையை தமிழக அரசு முறையாக பாதுகாக்க தவறியது கவலையளிக்கிறது.

இனியாவது, இதுபோன்ற சம்பவம் நிகழாத வகையில் பாதுகாப்பை பலப்படுத்தி, கோவிலைச் சுற்றி ரோந்து பணிகளை காவல்துறை துரிதப்படுத்த வேண்டும்" என்று விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK C Vijayabaskar Condemn to Viralimalai God Statue Damage


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->