பொன்முடி மீது வழக்கு பதியுங்கள்! இல்லை... எச்சரிக்கை விடுத்த உயர்நீதிமன்றம்!
DMK Minister Ponmudi Controversy speech case FIR
கடந்த 6 ஆம் தேதி நடைபெற்ற திமுக கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி செய்த சைவ-வைணவ சமயத்தை ஆபாசமாக சித்தரித்து பேசிய கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியன.
இதனை தொடர்ந்து திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி நீக்கப்பட்டாலும், அமைச்சர் பதவியும் கட்சி உறுப்பினராகும் தொடர்ந்து வருகிறார்.
மேலும், பொன்முடி மன்னிப்பு கோரியும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.இதற்கிடையே வழக்கறிஞர் ஜெகநாத், பொன்முடி மீது பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “ஒரு அமைச்சர் பொறுப்புடன் பேச வேண்டாமா? இந்தப் பேச்சு மிகவும் துரதிருஷ்டவசமானது” என கண்டனம் தெரிவித்தார்.
பொன்முடியின் பேச்சு குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரியுமா? என்ற கேள்விக்கு தமிழக டிஜிபி உடனடி பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், பொன்முடி மீது வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், பெண்கள் மற்றும் மதப் பிரிவுகளுக்கு எதிரான அவதூறான பேச்சுக்காக அமைச்சர் பொன்முடி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும், வழக்கு பதிவு செய்யவில்லையெனில் நீதிமன்றமே தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
English Summary
DMK Minister Ponmudi Controversy speech case FIR