பொன்முடி மீது சேற்றை வீசிய பின்னணியில் பாஜக - அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைச்சர் சேகர்பாபு தெரிவிக்கையில், "விழுப்புரம் மாவட்டத்தில், திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்தில் இருக்கும், இருவேல்பட்டு மற்றும் அரசூர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து வடிந்த பின்னர் அங்கிருக்கும் மக்களுக்கு நிவாரண பணிகளை வழங்கவும், ஆறுதல் கூறவும் அமைச்சர் பொன்முடி நேரடியாகச் சென்றிருந்தார். 

அந்த இடத்தில் குறிப்பிட்ட கட்சியில் (பாஜக) மகளிரணி பொறுப்பில் இருக்கும் விஜயராணி என்பவரும், அவரது உறவினர் ராமர் என்பவரும் உள்நோக்கத்தோடு வேண்டும் என்றே அமைச்சர் மீது சேற்றை வாரி வீசியுள்ளனர். இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

ஒருபுறம்,  நிவாரண பணிகளை அறிக்கையின் மூலம் பொய் வதந்தி பரப்பி முடக்க நினைக்கின்றனர். மறுபுறம் மக்கள் நல பணிகளில் ஈடுபடுவர்களை அச்சுறுத்தும் வகையிலும், பணிகளைத் தடுக்கும் வகையிலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். 

இதுபோன்ற தடைகளைத் தாண்டி வளர்ந்த இயக்கம்தான் திராவிட முன்னேற்ற கழகம். இதுபோன்ற எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல், மக்கள் பணிகளில் தொடர்ந்து பயணிப்போம் என்பதை எடுத்துக்காட்டும் வகையில்தான், அந்த நிகழ்விற்கு பிறகும் அமைச்சர் பொன்முடி நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறார்" என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MInister Sekarbabu say about Ponmudi attack BJP


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->