பழனிச்சாமி ஒரு தமிழின துரோகி... திமுக எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு..!! - Seithipunal
Seithipunal


திமுக சார்பில் தமிழக முழுவதும் பொங்கல் தினத்தை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை அடுத்த சூளை குறவன் குளத்தில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக எழும்பூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் கலந்து கொண்டார். திமுக சார்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பொது மக்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

அப்பொழுது பேசிய அவர் ஆளுநரின் தேநீர் விருந்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டது குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். பொங்கல் விழா மேடையில் அவர் பேசியதாவது "தமிழக மக்களின் தமிழின துரோகியாக எடப்பாடி பழனிச்சாமியை குற்றம் சாட்டுகிறேன்.

தமிழக சட்டப்பேரவையில் அண்ணா, பெரியார், சமத்துவம், சமூக நீதி, தமிழ்நாடு போன்ற வார்த்தைகளை பேச மறுத்த ஆளுநர் ரவியின் பொங்கல் தேநீர் விருந்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு தமிழக மக்களுக்கு துரோகம் செய்துள்ளார்" என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MLA allegations EPS is a traitor to Tamils


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->