பூத்ல #ஒத்த_ஓட்டு.. முதலில் ஒரு "கவுன்சிலரா" வெற்றி பெறுங்க.!! ரவுண்டு கட்டிய திமுக எம்.பி.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமாரி மாவட்டம் ம் குழித்துறை பகுதியில் புதிதாக நடைபெறவுள்ள சாலை பணிகளை  பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் நேற்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் "பீகாரை விட தமிழகத்தின் ராமேஸ்வரம் உட்பட பல மாவட்ட மக்கள் பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகுற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.


அதற்கு "அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் மனிதவள மேம்பாட்டு குறியிட்டு அறிக்கையை வைத்து தமிழகத்தின் ஒரு குக் கிரமாமோ அல்லது மலை வாழ் பகுதி கூட உதாரணமாக வைத்து என்னோடு பொது மேடையில் விவாதிக்கட்டும். அதற்கு அந்த ஆளுக்கு தைரியம் உள்ளதா? யோக்கியம் உள்ளதா? நான் தயாராக உள்ளேன் என்றார் காட்டமாக. இந்நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ்க்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார். மனோ தங்கராஜ் விவாதிக்க வருகிறார் என்றால், நான் எங்களின் பாஜக செய்தி தொடர்பாளரை அனுப்பி வைக்கிறேன்.

விவாதிப்பதற்கான இடத்தையும் நேரத்தையும் மனோ தங்கராஜ் முடிவு செய்யட்டும். மனோ தங்கராஜ் வருவதாக இருந்தால் எங்களின் செய்தி தொடர்பாளர்தான் வருவார். அவர்களின் தலைவர் ஸ்டாலின் வருவதாக இருந்தால் பாஜக தலைவரான நான் வருகிறேன்" என செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக நிலையில் தர்மபுரி திமுக எம்பி செந்தில் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அவர் தனது பதிவில் "தமிழ்நாடு பாஜக தலைவர் பதவி எங்கள் கழக கிளை செயலாளர் பதவிக்கு கூட சமம் கிடையாது Mr.அண்ணாமலை. பூத்ல #ஒத்த_ஓட்டு வாங்குன உங்களுக்கு மக்கள் மனம் வென்ற தலைவர் முதல்வர் கேட்குதா? நல்ல ஜோக், சிரிப்பு தான் வரல. ஒன்னு பண்ணுங்க, முதலில் ஒரு கவுன்சிலர் ஆவது போட்டியிட்டு வெற்றி பெறுங்கள்" என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk mp senthilkumar criticized bjp annamalai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->