சென்னையில் இன்று திமுக சார்பில் அமைதி பேரணி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 5வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வரும், தற்போதைய திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று கருணாநிதியின் நினைவு நாளையொட்டி சென்னையில் அமைதிப் பேரணி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதனால் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் "திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் தலைமையில் கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட கழக முன்னணியினர் கலந்து கொள்ளும் "அமைதிப் பேரணி" இன்று (ஆகஸ்ட் 7) திங்கட்கிழமை காலை 8:00 மணிக்கு சென்னை, அண்ணா சாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலை அருகிலிருந்து புறப்பட்டு, காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவர்” என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே தனது தந்தையும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நினைவு நாளையொட்டி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் "மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் இந்நாளில் உங்களுக்கு சொல்ல ஒரு நல்ல செய்தி கொண்டு வருகிறேன். 2024 தேர்தல் எங்களை எதிர்நோக்கி வந்து கொண்டிருக்கிறது. வழக்கமாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தேர்தல் அல்ல இது" என தனது அறிக்கையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Peace rally in Chennai today on occasion of Karunanidhi memorial day


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->